1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (18:54 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து கொடுத்த இலக்கு!

Newzeland
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கராச்சி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து உள்ளன இதனை அடுத்து 256 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும். ஏற்கனவே நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.
 
Edited by Mahendran