சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணி வீரர் பிரிட்டோரியஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் டிவைன் பிரிட்டோரியஸ். இவர், ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: சில நாட்களுக்கு முன் வாழ்க்கையில் கடினமான முடிவை எடுத்தேன். அதன்படி ஓய்வை அறிவிக்கிறேன். என் சிறுவயதில் நாட்டிற்கு விளையாட என லட்சியம் கொண்டிருந்தேன்.அதற்காக எனக்குக் கடவுள் திறமை கொடுத்து, அதேபோல் தேசத்திற்காக விளையாடும்படி செய்தார்.