1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (18:18 IST)

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

Bhumrah
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பும்ரா விலகி உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
இந்தியா இலங்கை இடையே டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை தொடரில் அவர் விளையாடவில்லை என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 
 
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட வில்லை என்றும் அவரது பந்து வீச்சை வலிமைப்படுத்த இன்னும் சிலர் சிறிது காலம் தேவைப்படும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது
 
இருப்பினும் பும்ராவுக்கு பதிலாக வேறு யாரையும் அணியில் சேர்க்க வில்லை என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by mahendran