டிஎன்பிஎல் இறுதி போட்டி: திண்டுக்கல் அணிக்கு 127 ரன்கள் இலக்கு
கடந்த சில வாரங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது
சேப்பாக்கம் அணி முதல் இரண்டு விக்கட்டுகளை விரைவில் இழந்துவிட்டாலும் அதன் பின் சுதாரித்து விளையாடிய சசிதேவ், அஸ்வின் மற்றும் கேப்டன் காந்தி ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதால் அணியின் ஸ்கோர் ஓரளவிற்கு உயர்ந்தது. சசிதேவ், மிக அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். அஸ்வின் 28 ரன்களும் காந்தி 22 ரன்களும் சுஷில் 21 ரன்களும் எடுத்தனர்.
திண்டுக்கல் தரப்பில் கௌசிக் மற்றும் அபிநவ் தலா 2 விக்கெட்டுகளையும் ரோஹித் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 127 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி இன்னும் சிறிது நேரத்தில் விளையாட உள்ளது. இந்த இலக்கை திண்டுக்கல் அணி எட்டிவிட்டால் அந்த அணிதான் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் அணி சாம்பியன் ஆகுமா அல்லது திண்டுக்கல் அணியை 126 ரன்களுக்குள் சுருட்டி சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா? என்பதை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிய வரும்