ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (07:00 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20: இந்தியா வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது. இதில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது
 
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவருமே சொதப்பியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொல்லர்டு மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 49 ரன்கள் எடுத்தார். பூரன் 20 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் மட்டும் ஜீரோ ரன்கள் மட்டுமே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணியும் இலக்கை எட்ட கொஞ்சம் திணறியது என்றே கூறலாம். இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 24 ரன்களும், கேப்டன் விராட் கோஹ்லி 19 ரன்களும், பாண்டே 19 ரன்களும்  எடுத்தனர்
 
நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சயினி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது