வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (06:32 IST)

டிஎன்பில்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் கில்லீஸ்

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டிஎன்பில் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று முதலாவது குவாலிஃபயர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் நடைபெற்றது 
 
நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்ற திண்டுக்கல் அணியும் சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி  காஞ்சி அணி கொடுத்த 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது
 
முதலாவது குவாலிஃபயர் போட்டியில் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மதுரை அணியும் வரும் 14ஆம் தேதி மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சேப்பாக்கம் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது