ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:36 IST)

உலகக்கோப்பை சாம்பியனை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா!

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது
 
கடந்த 1ஆம் தேதி ஆரம்பமான இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்களும் குவித்தது. அதேபோல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 274 ரன்கள் குவித்த போதிலும், இரண்டாவது இன்னிங்சில் படு மோசமாக விளையாடி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டீபன் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
 
ஸ்கோர் விபரம்: 
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 284/10
 
ஸ்மித்: 144
சிடில்:44
ஹெட்: 35
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 374/10
 
பர்ன்ஸ்: 133
ரூட்: 57
ஸ்டோக்ஸ்: 50
வோக்ஸ்: 37
 
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 487/7 டிக்ளேர்
 
ஸ்மித்: 142
வேட்: 110
ஹெட்: 51
பட்டின்சன்: 47
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 146/10
 
வோக்ஸ்: 37
ராய்: 28
ரூட்: 28
 
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி லண்டனில் தொடங்கும்