செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (18:09 IST)

அவுட் என தெளிவாக தெரிந்தும் நாட் அவுட் கொடுத்த 3வது நடுவர்!

அவுட் என தெளிவாக தெரிந்தும் நாட் அவுட் கொடுத்த 3வது நடுவர்!
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுட் என தெரிந்தும் 3வது நடுவர் அவுட் கொடுக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் போட்டித் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெங்களூர் பேட்ஸ்மேன் படிக்கல் கிளவுசில் பந்து பட்டு கேஎல் ராகுல் பிடித்ததற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்காததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மூன்றாவது நடுவர் முடிவு தவறாக கூறியதால் களநடுவரிடம் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் வாக்குவாதம் செய்தார்
 
மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள நடுவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் மூன்றாவது நடுவருக்கு முடிவு எடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும், ஆனால் 3-வது நடுவர் தவறாக முடிவு எடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது