1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (15:40 IST)

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு!

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரில் 48வது போட்டியான இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து சற்றுமுன் படிக்கல் மட்டும் விராட் கோலி களமிறங்கியுள்ளனர் 
 
இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
எனவே பஞ்சாப் அணி இந்த போட்டியை வெல்வதற்கு மிகுந்த முயற்சி எடுக்கும் என்பதும் பெங்களூர் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ஸ்ரீகர் பரத், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டான் கிறிஸ்டியன், அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ் மற்றும் சாஹல்
 
பஞ்சாப்: ராகுல், மயங்க் அகர்வால், மார்க்கம், பூரன், சர்பாஸ்கான், ஷாருக்கான், ஹெண்ட்ரிக்ஸ், ஹர்ப்ரீத் ப்ரார், ரவி பிஷானாய், ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்