டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 45வது போட்டி இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தது
இதனையடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதே நேரத்தில் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது