தொடர்புடைய செய்திகள்
- 18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!
- சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!
- தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!
- ஒரு சீசனில் அதிக தோல்விகள்… சி எஸ் கே படைத்த மோசமான சாதனை!
- ஆறுதல் வெற்றி கூட இல்லை.. சிஎஸ்கேவுக்கு இன்னொரு தோல்வி..!
அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.
மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவர் சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.
இந்நிலையில் அமெரிக்காவில் சி எஸ் கே அணி நிர்வாகத்தின் இன்னொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியினர் விளையாடிய போட்டியை சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அதிகாரிகளோடு அமர்ந்து பார்த்துள்ளார். அப்போது அவரை சிஎஸ்கே அணிக்குக் கொண்டுவர நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் சென்னை அணியில் இருந்து அஸ்வின் மற்றும் துபே ஆகியோரைக் கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது.