1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi shastri talked about bumrah resting in second test

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. இப்படி பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார் என்பதை முன்பே அறிவித்தது தவறானது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பும்ரா இல்லாமல் விளையாடினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசும்போது “பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிப்பது குறித்து இன்னொரு முறை யோசிப்பது நல்லது. ஏனென்றால் அவர் இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோற்பது உறுதி.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!