செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (22:34 IST)

புரோ கபடி 2019: ஹரியானா, உபி அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டியின் ஐந்தாவது வாரம் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மும்பை - ஹரியானா அணிகளும், உத்தரப் பிரதேசம் - ஜெய்ப்பூர் அணிகளும் மோதின 
 
முதலில் நடைபெற்ற மும்பை - ஹரியானா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹரியானா அணி 30 புள்ளிகளும், மும்பை அணி 27 புள்ளிகளும் எடுத்ததால் ஹரியானா அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து நடைபெற்ற உத்தரப்பிரதேசம் மற்றும் ஜெய்பூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் உத்தரப்பிரதேச அணி மிக அபாரமாக விளையாடி 31 புள்ளிகளை எடுத்து இருந்தது. ஆனால் ஜெய்ப்பூர் அணியால் 24 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி தோல்வி அடைந்தது 
 
இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி தோல்வி அடைந்த போதிலும் அந்த அணி 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் டெல்லி, மூன்றாவது இடத்தில் பெங்கால், நான்காவது இடத்தில் பெங்களூரு, ஐந்தாவது இடத்தில் ஹரியானா மற்றும் ஆறாவது இடத்தில் மும்பை உள்ளன. ஏழாவது இடத்தில் 23 புள்ளிகள் பெற்று தமிழ்தலைவாஸ் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது