சென்னை மண்ணில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் ஏமாற்றம்

கடந்த 4 வாரங்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முதல் சென்னையில் போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. சென்னையில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி வாகை சூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தமிழ் தலைவாசல் அணி, பெங்களூர் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி 11 ரன் புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தமிழ் தலைவாசல் சென்னை மண்ணில் தோல்வி அடைந்தது இந்த போட்டியை நேரில் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. தமிழ்தலைவாஸ் அணி 21 புள்ளிகளும் பெங்களூர் அணி 32 புள்ளிகளும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்தலைவாஸ் அணியின் அஜய் தாக்கூர் நேற்று 4 புள்ளிகள் மட்டுமே தனது அணிக்கு ரெய்டில் எடுத்துக் கொடுத்தார். ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு அணியின் பவன்குமார் அபாரமாக விளையாடி 9 புள்ளிகள் அந்த அணிக்கு எடுத்துக் கொடுத்தார்

இதனையடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டி போட்டியில் இரு அணிகளும் தலா 30 புள்ளிகள் எடுத்ததால் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிவடைந்தது. நேற்றைய போட்டியின் முடிவிற்குப் பின் ஜெய்பூர், டெல்லி, மற்றும் பெங்கால் முதல் மூன்று இடத்திலும் பெங்களூரு, மும்பை, மற்றும் அரியானா அணிகள் அடுத்த மூன்று இடத்திலும் உள்ளன என்பது ம்தமிழ் தலைவாஸ் அணி 8வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :