கடைசி இரண்டு நிமிடத்தில் திடீர் திருப்பம்: தமிழ் தலைவாஸ் அசத்தல்

Last Modified ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (21:54 IST)
இன்று நடைபெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான புரோ கபடி போட்டியில் இரு அணிகளும் தலா 31 புள்ளிகள் எடுத்ததை அடுத்து போட்டி டிரா ஆனது
முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் சிறப்பாக விளையாடியது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணி ஒரு கட்டத்தில் 20-18 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் புனே அணி சுதாரித்து விளையாடியதை அடுத்து புனே அணி அதிக புள்ளிகள் பெற்றது. ஒரு கட்டத்தில் புனே 29 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகளும் பெற்றிருந்தன.

இந்த நிலையில் கடைசி இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது தமிழ் தலைவாஸ் அணி வீரர் ரைட் செய்து நான்கு புள்ளிகளை அள்ளிக்கொண்டு வந்தார். இதனால் 29-29 என்ற கணக்கில் சமன் ஆனது. கடைசி 20 வினாடிகள் இருக்கும்போது தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகளும், புனே 31 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி த்ரில்லாக ஒரு புள்ளியை எடுத்து போட்டியை சமன் செய்தது.


இதில் மேலும் படிக்கவும் :