1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:09 IST)

கைது சம்பவம் குறித்து ரெய்னா தரப்பில் விளக்கம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவருமான சுரேஷ் ரெய்னா மும்பையிலுள்ள கிளப் ஒன்றில் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மகாராஷ்டிரா மாநிலத்தின் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சுரேஷ் ரெய்னா கைது சம்பவம் குறித்து அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது 
 
மும்பை இரவு நேர விடுதியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ரெய்னா நண்பரின் அழைப்பின் பெயரில் அந்த விடுதிக்கு சென்றதாகவும் நேர கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் குறித்து அவருக்கு தெரியாது என்றும் ரெய்னாவின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது 
 
இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது