வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (12:53 IST)

மேட்ச் இல்ல.. க்ளப்பில் குத்தாட்டம்; சுரேஷ் ரெய்னா கைது!

கொரோனா விதிமுறைகளை மீறி மும்பையில் க்ளப் ஒன்றில் ஆட்டம் போட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள நிலையில் க்ளப் மற்றும் ஹோட்டல்களில் ஆட்டம், பாட்டம் போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை விமான நிலையம் அருகே உள்ள ட்ராகன்ஃப்ளை என்ற க்ளப்பில் விதிமுறையை மீறி பார்ட்டி நடந்து வருவதாக மும்பை போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து க்ளப்பில் ரெய்டு சென்ற போலீஸார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் பெயிலில் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக விளையாட இருந்த ரெய்னா துபாயிலிருந்து வெளியேறிய நிலையில் இந்தியாவில் பல பகுதிகளில் சுற்றி வந்து கொண்டிருந்ததும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததும் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த கைது சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.