1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (17:02 IST)

திமுகவுடன் கூட்டணியா ? இல்லையா ? கமல்ஹாசன் விளக்கம் !

மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன்  திமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன்  திமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

அண்ணா பிறந்த மண்ணில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் 7 திட்டங்களை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். என் 5 வயது முதல் 60 வயது வரை என் மீது புகழ் வெளிச்சம் விழுந்தது. இபோது நான் அரசியக்கு வந்த பின்  மக்கள் என் மீது காட்டும் அன்பு அளவிடமுடியாததாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கமல் அறிவித்த 7 திட்டங்கள் பின்வருமாறு:

1.இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்,2.நவீன தற்சார்ப்பு கிராமங்களை உருவாக்குதல், 3.துரித நிர்வாகம், 4.சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும், 5.மின்னு இல்லங்களாக மாற்றுதல்,6. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப்புரட்சி, 7.தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்துதல் ஆகும்.