திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (14:48 IST)

ஐசிசி உலகக்கோப்பை: தென் ஆப்ரிக்கா - வங்காளதேச அணி மோதல்!

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. 
 
தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றியை தக்கவைக்க அந்நாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி வீரர்கள் முதல்வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தீவிர முயற்சியை மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். 
 
இந்த இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய போராட்ட களத்தில் இறங்கியுள்ளதால் நிச்சயம் இந்த மேட்ச் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.