136 ரன்களில் சுருண்டது இலங்கை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

srilanka team
Last Updated: சனி, 1 ஜூன் 2019 (18:05 IST)
தற்போது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளான இன்று இலங்கை-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி தொடங்கியது. 3 மணிக்கு தொடங்கிய அட்டத்தில் வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 136 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது இலங்கை அணி. அடுத்ததாக ஆடப்போகும் நியூஸிலாந்து அணிக்கு 137 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று நடந்த போட்டியிலும் வெறும் 21 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ஓவர்கள் கொண்ட விளையாட்டில் 30 ஓவர்கள் கூட தாண்டாமல் இப்படி பிரபலமான அணிகள் பல்ப் வாங்குவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இந்த மேட்ச் 6 மணிக்கு தொடங்குகிறது.இதில் மேலும் படிக்கவும் :