வியாழன், 3 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2025 (15:24 IST)

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

RCB vs GT IPL 2025

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ள நிலையில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 3 போட்டிகளை முடித்துள்ளன, இந்நிலையில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த சீசனிலாவது கண்டிப்பாக கப் ஜெயித்தே ஆக வேண்டும் என ஆர்சிபி அணியும் சரி, ரசிகர்களும் சரி ஆர்வமாக இருக்கின்றனர்.

 

அதற்கேற்றார் போல இந்த சீசனின் முதல் இரண்டு ஆட்டங்களிலுமே அதிரடி சரவெடியாய் விளையாடி தொடர் வெற்றிகளை பெற்று தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளனர். ஆர்சிபியின் நெட் ரன் ரேட்டும் நல்ல விதமாக உள்ளது. 

 

குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியில் வெறும் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தனர்.

 

குஜராத்தின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் என தொடக்க பேட்டிங் லைன் அப் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டர் தாண்டி வலுவற்ற தன்மை உள்ளது. ஆனால் பந்துவீச்சில் ரஷித் கான், சாய் கிசோர், ரபாடா என வலுவான பவுலர்கள் உள்ளனர். அதனால் டாஸ் வெல்லும் பட்சத்தில் பவுலிங் எடுத்து ரன்னை குறைக்கவே குஜராத் முயலும் என எதிர்பார்க்கலாம்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பொறுத்த வரை கேப்டன் ரஜத் படிதாரின் ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது, கோப்பை வெல்ல வேண்டும் என்ற முழு எனர்ஜியில் இருக்கிறார். பில் சால்ட், விராட் கோலி இணை சிறப்பான தொடக்கத்தை தருகிறார்கள். பந்துவீச்சில் ஹெசில்வுட் நம்பகமான விக்கெட் வீழ்த்துபவராக இருக்கிறார். க்ருணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன். புவனேஷ்குமார் போன்றோரும் அணியின் பந்துவீச்சுக்கு நல்ல பலம். 

 

Edit by Prasanth.K