மீண்டும் தெறிக்க விட்ட சச்சின் சேவாக் கூட்டணி – இந்தியா லெஜண்ட்ஸ் வெற்றி !

சச்சின் மற்றும் சேவாக்
Last Modified ஞாயிறு, 8 மார்ச் 2020 (07:22 IST)
சச்சின் மற்றும் சேவாக்

சாலை விழிப்புணர்வுக்காக முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த தொடரின் முதல் போட்டியில் நேற்று இந்தியா லெஜண்ட்ஸும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகளும் மோதின. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சந்தர்பால் அதிகபட்சமாக 61 ரன்கள் சேர்த்தார். இந்தியா சார்பில் முனாப் படேல், பிரக்யான் ஒஜா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சச்சின் 36 ரன்களில் அவுட் ஆகி வெளியேற நிலைத்து நின்று ஆடிய சேவாக் அரைசதம் அடித்து 57 பந்துகளில் 74 ரன்களை சேர்த்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அதன் பின் வந்த கோனி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் வெற்றி இலக்கை எளிதாக எட்ட உதவினர்.இதில் மேலும் படிக்கவும் :