1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (17:28 IST)

சச்சின் , விராட் கோலி, விவேகானந்தரை புகழ்ந்த் அதிபர் டிரம்ப் !

சச்சின் , விராட் கோலி, விவேகானந்தரை புகழ்ந்த் அதிபர் டிரம்ப் !

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் என அமெரிக்க திகழும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
 
இன்று (24 ஆம் தேதி ) _ குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
 
அங்கு லட்சக்கணக்கான மக்கள் குழுமியுள்ள நிலையில், முதலில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு டிரம்ப் பேச ஆரம்பித்தார். 
 
அப்போது, டொனால்ட் டிரம்ப் கூறியதாவது :
 
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும். இந்தியர்களின் ஒற்றுமை உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என தெரிவித்தார்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு நவீன ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
 
சிறப்பு வரவேற்பளித்த நண்பர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல , கடின உழைப்பு பக்திக்கு வாழும் உதாரணம் மோடி என  தெரிவித்தார்.
 
மேலும், தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளர்., அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள் இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இருப்பவர்  பிரதமர் மோடி. விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர் ; சச்சின் விராட் கோலி, சச்சின் , ஷாருக்கான் விராட் கோலியால் நீங்கள் உற்சாகம் அடைகிறீர்கள்  என தெரிவித்தார்.
 
வெற்றிக்கரமாக நமஸ்தே டிரம்ப் நிறைவடைந்த பின், டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை தாஜ்மகால் சென்று சுற்றிப்பார்க்கவுள்ளனர்.