செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 5 மார்ச் 2020 (14:00 IST)

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மீது வரதட்சணை புகார்..

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது அவரது மனைவி வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் சச்சின் பன்சால். அவரது மனைவி ப்ரியா பன்சால், தனது கணவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், திருமணத்தின் போது தனது தந்தை 50 லட்சம் செலவு செய்தார் எனவும், சச்சின் பன்சாலுக்கு 11 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்புகாரில், ”தன்னுடைய கணவர், என்னுடைய சொத்துக்களை அவருக்கு எழுதி தருமாறு வற்புறுத்தினார். மேலும் தான் அதற்கு மறுத்தவுடன், தனது கணவரின் உறவினரும் தன்னை கொடுமைப்படுத்தினர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணம் கேட்டு தன்னை உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளார் எனவும் அப்புகாரில் ப்ரியா பன்சால் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இப்புகாரின் அடிப்படையில் சச்சின் பன்சால், அவரது தந்தை சத்யபிரகாஷ் அகர்வால், தாயார் கிரண் பன்சால், தம்பி நிதின் பன்சால் ஆகியோர் மீது கர்நாடகா மாநிலம் கொராமங்கலா போலீஸார் 498A, 34 பிரிவு 3 மற்றும் 4 வரதட்சனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சச்சின் பன்சால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்தியபோது அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.