1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Angelo Mathew funny comment on his hair fall

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

இலங்கை
இலங்கை அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியவர் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணி தனது ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றவர்களை இழந்தபிறகு அந்த அணி சரிவை சந்தித்தது. ஆனால் அந்த காலத்தில் தோன்றிய ஒரு திறமையான வீரராக மேத்யூஸ் கருதப்படுகிறார்.

இலங்கை அணியை அனைத்து விதமானப் போட்டிகளிலும் அவர் வழிநடத்தியுள்ளார். சமீபத்தில் ஓய்வை அறிவித்த அவர்  இலங்கை அணியை வழிநடத்தியது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இலங்கை அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வழிநடத்திய போது எனக்கு அதிகமாக முடிக் கொட்டியது. எல்லா வீரர்களுக்கும் இது நடக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை அணியாக இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் கேப்டனாக இருக்கும் போது உங்கள் தலையில் முடிக் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு. அனைவரின் பார்வையும் உங்கள் மீது இருக்கும்.  அந்த பொறுப்பு வலியாக இருந்தாலும் நான் அதை அனுபவித்தே செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?