புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (16:44 IST)

15 வயதில் உலகையே திரும்பி பார்க்க வைத்த கிரிக்கெட் நாயகி - ஷஃபாலி வர்மா!!

இந்திய மகளிர் அணிக்கு புதிதாக கிடைத்திருக்கும் பலம்வாய்ந்த வீரர் 15 வயதே ஆன ஷஃபாலி வர்மா. 
 
9 வயது இருக்கும் போது சச்சின் தனது கடைசி ரஞ்சி கோப்பையை போட்டியா ஹரியானாவில் விளையாடுவதை நேரில் பார்த்து கைத்தட்டிய இவர் இன்று தனது 15 வயதில் சச்சினின் சாதனையை முறியடித்து இந்திய மகளிர் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். ஆம், ஷஃபாலி வர்மா இந்திய மகளிர் அணியின் திறமைவாய்ந்த இளம் ரத்தம் இவர். 
 
ஹரியானாவை சேர்ந்த இவர், சின்ன வயதில் தலைமுடியை வெட்டி, தன்னை தன் சகோதரன் போல் காட்டிக்கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கியவர். தனது 9 வயதில், 19 வதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டு பேட்டிங்கில் கைத்தேர்ந்தார். 
கடின உழைப்பால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சீனியர் பெணிகள் அணியில் தேர்வாகி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்து, சச்சினின் 30 வருட சாதனையை  முறியடித்துள்ளார். அதோடு இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு முன்னாள் வீரர் சேவாக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார். 
 
ஷஃபாலி வர்மாவின் கடின உழைப்பு, கிரிக்கெட் மீதான காதல், தனது திடமான குறிக்கோள் ஆகியவை தற்போது உலகமே அவரை திரும்பி பார்த்து வியக்கும் நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது.