திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (18:43 IST)

சச்சின், டிராவிட் எனக்கு சொன்னது இவை தான் - யஷஸ்வி ஜெய்ஸ்லால்

சச்சின், டிராவிட் எனக்கு சொன்னது ’இவை தான்’ - யஷஸ்வி ஜெய்ஸ்லால்
19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பங்கதேஷ் அணிகள்  விளையாடின. இதில், இந்தியா அணிதான் வெல்லும் என பலரும் எதிர்பார்த்திருந்த போது, பங்களதேஷ் வீரர்கள் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை தங்கள் வசமாக்கினர்.
 
அப்போது பங்களதேஷ் அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக தங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
 
இந்திய வீரர்களை சீண்டும் வகையில்,சில செயல்களில் ஈடுபட்டனர். போட்டி முடிவடைந்த பின் இரு அணி வீரர்களுக்கும்  சிறுது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
 
அப்போது,  இந்திய அணி வீரர் யஷஸ்வி  ஜெய்ஸ்லால்  மிகவும்  பொறுமையுடன் நடந்து கொண்டார். அவரது பக்குவமான பண்பு அனைவரையும் கவர்ந்தது மட்டுமல்லாமல் அவர் இறுதி போட்டியில் 121 போட்டியில் 88 ரன்களை அடித்தார். 
 
அதன் பின் ஒரு பிரபல இதழுக்கு பேட்டியளித்த அவர் சச்சின் மற்றும் டிராவிட் என்னிடம் சொன்னது, உன்னுடைய பேட் தான் பேசனும் .. உன் வாய் அல்ல என்று தெரிவித்தார். மேலும் நெருக்கடி காலங்களில் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.