புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:09 IST)

கோலியை புகழ்ந்து தள்ளிய பூம் பூம் லாலா !!

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.

பாகிஸ்தான் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாய் வலம் வந்தவர் சாஹித் அப்ரிடி. இவருக்கு பூம் பூம் அப்ரிடி, லாலா போன்ற ரசிகர்கள் வைத்த செல்லப்பெயர்களும் உண்டு. தற்போது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஐசிசி கோலியின் தரவரிசை பட்டியலை நேற்று ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அப்ரிடி “வாழ்த்துக்கள் விராட் கோலி. நீங்கள் சிறந்த விளையாட்டு வீரர். தொடர்ந்து வெற்றிபெறவும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முக்கியமாக இம்ரான் கானுக்கு நெருக்கமான அவரது சக வீரர்கள், இந்தியாவையும் இந்திய வீரர்களையும் விமர்சித்து வந்த நிலையில் சாகித் அப்ரிடி கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.