புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (07:06 IST)

விராத் கோஹ்லி அபார அரைசதம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் அபாரமாக விளையாடி 72 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
ஸ்கோர் விபரம்:
 
தென்னாப்பிரிக்கா: 149/5  20 ஓவர்கள்
டீகாக்: 52
பவுமா: 49
மில்லர்: 18
 
இந்தியா: 151/3  19 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 72
தவான்: 40
ஸ்ரேயாஸ் ஐயர்: 16
 
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும்