புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:43 IST)

ரிஷப் பண்ட்டின் ஷாட் செலக்‌ஷன் அணியைக் கவிழ்த்து விடுகிறது – ரவி சாஸ்திரி ஆதங்கம் !

ரிஷப் பண்ட் தனது சில மோசமான ஷாட் செலக்‌ஷனால் அணியையும் கவிழ்த்து விடுகிறது என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டு அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ முதல் பந்திலேயே பண்ட் மோசமான ஷாட்களை விளையாடுவது ஏமாற்றமாக உள்ளது. அதுவும் எதிர்முனையில் கோஹ்லி போல வீரர்கள் இருக்கும்போதே அவ்வாறு விளையாடுவது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாதிரி அவுட்டை அவர் தவிர்த்தால் அவரைப்போன்ற ஒரு அதிரடி வீரரைப் பார்க்க முடியாது. ஆனால் அதற்கு அவர் சூழ்நிலையைக் கணித்து விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.