தொடர்புடைய செய்திகள்
- குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!
- இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!
- இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!
- நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!
- சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!
இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!
இந்திய அணி இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடருக்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்று பெயர் வைக்கப்படும்.
ஆனால் தற்போது அந்த தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தனிப்பட்ட முறையில் பிசிசிஐ –ஐ தொடர்பு கொண்டு “இந்த தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்றே பெயர் தொடர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டோடி குடும்பத்தினரின் கௌரவத்தை தொடரும் விதமாக அதே பெயரில் தொடர் நடத்தப்பட வேண்டும் என சச்சின் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.