இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

indian cricket
Prasanth Karthick| Last Modified புதன், 18 செப்டம்பர் 2019 (19:04 IST)
தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா மோதும் இரண்டாவது சுற்று டி20 போட்டி தற்போது தொடங்கியுள்ளது.

ஏற்கனவே முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் மீதம் உள்ள இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போது டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்காக தயார் செய்யப்பட்ட இந்திய அணி பட்டியலில் பெரும்பாலானோர் ஆல் ரவுண்டர்கள். எனவே பேட்டிங்கின்போது கணிசமான ரன்களை குவிப்பது சவாலாக இருக்காது. ஆனால் அதற்குமுன் இலக்கு எட்டும் தூரத்தில் இருந்தாக வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ள இந்தியா முதலில் ரன் அளவை முடிந்தளவு குறைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் ரன் மெஷின்  பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :