ரிஷப் பந்த் ஸ்டைல் வேறு… என் ஸ்டைல் வேறு – விராட் கோலி கருத்து !

Last Modified செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (09:08 IST)
இந்திய அணியின் கேப்டன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு ஆதரவாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி முயன்று வருகிறது. அதற்காக அவருக்கு போதுமான சில வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அவர் அதிரடியாக விளையாடினாலும் மோசமான ஷாட்களால் அவுட் ஆகி வருகிறார். இது அவர் மீது விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் அவர் மீதான விமர்சனம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ள கருத்தில் ‘அவர் ஓரிரு முறை முதல் பந்தில் ஆட்டமிழந்துவிட்டார் என்பதற்காக அவர் ஸ்டைலை மாற்ற தேவையில்லை. ஆனால் கொஞ்சம் சிந்தித்து விளையாடுவது முக்கியமானதாகும். என்னை ஒப்பிடும்போது அவர் மோசமான சூழ்நிலைகளில் 5 பவுண்டரிகளை அடிக்கக் கூடியவர். ஆனால் நான் வேகமாக ரன்களை ஓடி அதைக் கடக்க முயல்வேன். அவரது ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :