செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கே அணி வீரருக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருது!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி மிக அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
முதலில் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தது என்பதும் அதில் ருத்ராஜ் அபார சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்தது
 
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற போதிலும் அபாரமாக சதமடித்த ருத்ராஜ் சதமடித்தார் என்பதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் ருத்ராஜ் 88, 38, 40, 45, 101 ஆகிய ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.