ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மார்ச் 2025 (13:24 IST)

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

Hardik Pandya sai kishore

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், சாய் கிஷோரும் முறைத்துக் கொண்ட நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

நேற்று ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 196 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 160 ரன்களை மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்.

 

இந்த போட்டியில் 15வது ஓவரில் குஜராத் அணி பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பந்துவீசிய போது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் அவருக்கும் மோதல் எழுந்து ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

 

இது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து சாய்கிஷோரே விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “ஹர்திக் பாண்ட்யா எனது நல்ல நண்பர். ஆனால் களம் என்று வந்துவிட்டால் நாங்கள் இப்படிதான் இருப்போம். எதிரணியை சேர்ந்தவர்கள் நண்பராக இருந்தாலும் கூட இப்படிதான் போட்டி போட்டுக்கொள்வேன். ஆனால் இதை நாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டோம். எல்லாம் போட்டியின் ஒரு பகுதிதான்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K