ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மார்ச் 2025 (19:20 IST)

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

csk vs rr

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி ப்ளேயிங் 11ல் கான்வே இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இன்றைய ஐபிஎல்லின் மாலை நேர போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முந்தைய போட்டியிலும் பவுலிங் தேர்வு செய்தது தோல்வியில் முடிந்திருந்தது. காரணம் சிஎஸ்கே பல கேட்ச்களை தவறவிட்டது. ஆனால் இந்த முறை பீல்டிங்கில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த முறையும் சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11ல் டெவான் கான்வே இடம்பெறவில்லை. ஆனால் விஜய் ஷங்கரும், ஜேமி ஓவர்டனும் உள்ளே வந்திருக்கிறார்கள். இந்த வியூகம் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தருமா என காத்திருந்து பார்ப்போம்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரெல், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, 

 

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ராகுல் த்ரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அஹமது, மதீஷா பதிரனா,