1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (12:37 IST)

ஐபிஎல் தொடர்: இன்று இரண்டு போட்டிகள்

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
 
ஷார்ஜாவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
 
இதனைத்தொடர்ந்து அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் பிளே ஆஃப்புக்குள் ஏற்கெனவே நுழைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.