தொடர்புடைய செய்திகள்
- பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!
- இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான் அல்ல.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட டிரம்ப்..!
- 18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!
- இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!
- மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!
ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெண்டுல்கர்- ஆண்டர்சன் தொடரில் விளையாடுவதற்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் இன்று தொடங்குகிறது. இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
இது இந்திய அணிக்குப் பின்னடைவாகவும், இங்கிலாந்துக்கு சாதகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணிக் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இது குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதில் “இந்திய அணியில் ரோஹித், கோலி மற்றும் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுக்குப் பதில் விளையாடும் வீரர்களுக்கு எதிராக விளையாடுவது எளிதாக இருக்காது. இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் இருக்கின்றனர். மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இருப்பதால் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு எளிதாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.