ரஷ்யாவில் செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
உக்ரைன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. அதேபோல் கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு தடையை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் செல்போன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது
அதேபோல் பணப்பரிமாற்ற செயலியான கூகுள் பே, ஆப்பிள் பே உள்பட அனைத்து பணபரிமாற்ற செயலிகளும் ரஷ்யாவில் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது