1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (15:46 IST)

ரொனால்டோ விளையாடும் அணியில் அவரது மகனும்..! – அதே 7ம் நம்பர் ஜெர்சி!

Ronaldo Jr
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகனும் கால்பந்து அணியில் இணைந்துள்ளார்.



உலகம் முழுவதும் தற்போது புகழ்பெற்று விளங்கும் கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரரான கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். க்ளப் போட்டிகளில் பிஎஸ்ஜி போன்ற பல அணிகளுக்காக விளையாடி வந்தவர் தற்போது சவுதி அரேபியாவின் அல் நசார் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரொனால்டோவின் மகனும் தந்தையை போலவே கால்பந்து போட்டிகளில் கலக்குவதற்காக களம் இறங்கியுள்ளார். அதுவும் ரொனால்டோ இருக்கும் அல் நசார் கால்பந்து அணியின் யு-13 அணியில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் ரொனால்டோவின் ராசியான 7ம் நம்பர் ஜெர்சியுடன் களம் இறங்குகிறார் அவரது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர். தந்தையை போலவே மகனும் கால்பந்தில் கலக்குவார் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K