ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (14:20 IST)

நான் உன்னுடன் இருக்கிறேன்… குட்டி மலிங்காவுக்கு ஆதரவாக மலிங்கா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசுவதால் அவரை குட்டி மலிங்கா என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இப்போது இலங்கை அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் உலக கோப்பை தொடரில் மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார். இரண்டு போட்டிகளில் 19 ஓவர்கள் வீசி 185 ரன்கள் கொடுத்துள்ளார். விக்கெட்கள் ஒன்று கூட எடுக்கவில்லை.

இதனால் இப்போது இணையத்தில் மோசமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் பதிரனாவோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள லசித் மலிங்கா “நான் உன்னோடு இருக்கிறேன் மதீஷா. நான் உன்னை நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.