தென் ஆப்பிரிக்கா போல் இங்கிலாந்துக்கும் நெருக்கடி கொடுப்போம்: ரோகித் சர்மா

Rohit Sharma
Last Updated: புதன், 11 ஜூலை 2018 (17:53 IST)
இங்கிலாந்து எதிராக ஒருநாள் போட்டி தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கிறது.
 
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சற்றுமுன் செய்தியாளர் சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
தென் ஆப்பரிக்கா மண்ணில் தென் ஆப்பரிக்கா அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போல் இங்கிலாந்து வீரர்களுக்கும் நெருக்கடி கொடுப்போம். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது அவசியம்.
 
பெரும்பாலும் சேஸிங் செய்ய விரும்புகிறோம். இருந்தாலும் டாஸ் நமது கையில் இல்லை. எதுவாக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். மிடில் ஆர்டர் பேஸ்ட்மேன் சிறப்பாக செயல்படுவது அவசியம்.
 
முதல் 30ஓவர் வரை நிதானமாக விளையாட வேண்டும். அதன்பின்னர் தேவைக்கு ஏற்ப ஸ்கோரை உயர்த்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வியூகம் உள்ளது. அதோடு நாங்கள் ஒத்து இருப்போம். 
 
ராகுல் எந்த ஆர்டரில் பேட் செய்வார் என்று தெரியவில்லை. ஒருநாள் போட்டிக்கான அணியில் நீடிக்க அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். ராகுல் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :