வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (09:20 IST)

நான் இங்கிலாந்து வாழ் இந்தியர், ஏன் ஓடிப்போக வேண்டும்: விஜய் மல்லையா

நான் எப்போதுமே இங்கிலாந்து வாழ் இந்தியர் என்றும் நான் அதிகமாக இந்தியாவில் வசிப்பது இல்லை என்றும் உண்மை இப்படியிருக்க நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதாக கூறுவது தவறு என்றும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் அரசியலுக்காக இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் என்னை இந்தியாவுக்கு அழைத்து வருவதாக கூறுவதாகவும், என்னை புனித சிலுவையில் தொங்கவிடுவதன் மூலம் வாக்கு வங்கிகளை பெறலாம் என அரசியல் கட்சிகள்  நம்புவதாகவும் இதற்காகவே என்னை இந்தியா கொண்டு செல்ல மத்திய அரசு விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்தில் எனது பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், இதனால் இங்கிலாந்தில் உள்ள எனது சொத்துகளை பறிமுதல் செய்யும் விவகாரம் குறித்து எனக்கு எவ்வித கவலையும் இல்லை என்று கூறிய விஜய் மல்லையா, நான் தங்கியிருக்கும் வீடு எனது குழந்தைகளுக்கு சொந்தமானது என்றும், லண்டனில் உள்ள ஒரு வீடு எனது தாய்க்கும் சொந்தமானவை என்றும் அவற்றை சட்டப்படி யாரும் தொட முடியாது என்றும் கூறியுள்ளார்.