இந்தியர்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வலிறுத்தும் அமெரிக்கா
இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நவீன உலகில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளால் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 34% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில்தான் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் அதிகளவில் இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 15% குறைந்துள்ளது. அமெரிக்காவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஆகியவை பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கல் காலேஜ் ஆப் கார்டியாலஜி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.