வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (10:16 IST)

முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்த ஆர் சி பி!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. அதன் பின்னர் ஆடிய பெங்களூர் அணி கடைசி ஓவரில் 13 ரன்களை சேர்க்க முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இத்தனைக்கும் களத்தில் டிவில்லியர்ஸ் இருந்தார். இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் ஆர் சி பி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஏனென்றால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நெட் ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் உள்ளன. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.