வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (08:50 IST)

மணிக்கு 153 கி.மீ வேகத்தில் வந்த பந்து; பதறிப்போன படிக்கல்! – உம்ரான் படைத்த சாதனை!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியுடன் சன்ரைசர்ஸ் மோதிய நிலையில் அதிவேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் உம்ரான் மாலிக்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன.

இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைஸர்ஸ் அணி 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக பேட்டிங் இறங்கிய ஆர்சிபியை 137 ரன்களுக்குள் சுருட்டி வெற்றியை கைப்பற்றியது. எனினும் இது சன்ரைஸருக்கு ஆறுதல் வெற்றியாகவே உள்ளது.

இந்த போட்டியில் ஆர்சிபி வீரர் படிக்கல்லுக்கு சன்ரைஸர்ஸ் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் பந்து வீசுகையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 153 கி.மீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். ஐபிஎல் சீசனின் அதிவேகமான பந்துவீச்சு இது என்பதன் மூலமாக உம்ரான் சாதனை படைத்துள்ளார்.