1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:19 IST)

அஸ்வினைக் காயப்படுத்தி இருந்தால் அது மகிழ்ச்சிதான்… ரவி சாஸ்திரி கருத்து!

தன்னுடைய கருத்து ரவிச்சந்திரன் அஸ்வினைக் காயப்படுத்தி இருந்தால் அது மகிழ்ச்சிதான் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

சமீபத்தில் அஸ்வின் பேசியிருந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்தது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அளித்த நேர்காணலில் முன்னாள் பயிற்சியாளரின் வார்த்தைகள் தன்னை நொறுங்கும் விதமாக செய்தது எனக் கூறியிருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை எடுத்து வெற்றிக்கு முக்கியமானக் காரணமாக இருந்தபோது ‘ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்தியாவின் சிறந்த பவுலர் குல்தீப்தான்’ என்று கூறியது என்னை உடைந்து போக செய்தது. குல்தீப்புக்காக நான் மகிழ்கிறேன். ஆனால் என்னை மட்டம் தட்டினால் நான் எப்படி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியும்’ எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி இப்போது பேசியுள்ள ரவி சாஸ்திரி ‘வார்த்தைகளில் வெண்ணெய்யை தடவி பேசுவது என் வேலையல்ல. முன் திட்டம் இல்லாமல் உண்மையைக் கூறுவதுதான் என் பாணி. நான் குல்தீப்பைப் பாராட்டியது அஸ்வினுக்கு காயம் ஏற்படுத்தி இருந்தால் அது மகிழ்ச்சிதான். ’ எனக் கூறியுள்ளார்.