1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (18:53 IST)

மண்டேலா இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதையடுத்து டான் படத்தை முடித்துள்ள அவர் அடுத்து சிங்கப்பாதை மற்றும் நேரடி தெலுங்குப் படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்த திரைப்படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.