வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:18 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐம்பதாவது போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிட்டால் கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தகுதி ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் பஞ்சாப் அணி அதிரடியாக பேட்டிங்கி செய்யவுள்ளது பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் களம் இறங்கிய பின்னர் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் இன்று ஆறாவது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்