வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (12:26 IST)

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு!

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு!
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவதால் சுவராசியம் சிறிது குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்று ஜிம்பாப்வே அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த வகையில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் 
 
இதனால் இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது